அரச கிளவுட் அமைப்புக்கு AI மூலம் பாதுகாப்பு: அரசாங்கம் அறிவிப்பு

அரச கிளவுட் அமைப்பின் சேவைகளைப் பாதுகாக்க AI மூலம் அச்சுறுத்தல் கண்டறிதல் அமைப்பைப் பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த, பிரதி அமைச்சர், கிளவுட் அமைப்பின் சேவைகளின் கீழ் வரும் நிறுவனங்களைப் பாதுகாப்பதையும் தரவுகளைப் பாதுகாப்பதையும் உறுதி செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில், அமைப்புகளின் செயலிழப்பால் எந்த அரச சேவையும் பாதிக்கப்படவில்லை எனவும், அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களால் சேவைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.