இரத்மலானை, தர்மராம வீதி பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் கிரிக்கெட் மட்டையால் கொடூரமாக தாக்கப்பட்டு இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தர்மராம வீதி பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே கொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட இளைஞனின் குடும்பத்தினருக்கும் அயல் வீட்டு குடும்பத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





