ஈரானின் புதிய உயர் தலைவராக மொஜ்தபா காமேனி நியமிக்கப்படுவதை எங்களால் ஏற்க முடியாது – ட்ரம்ப்

அயதுல்லா அலி காமேனியின் இரண்டாவது மகனான மொஜ்தபா காமேனி புதிய உயர் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், புதிய உயர் தலைவராக அவரை ஏற்றுக்கொள்ள எங்களால் முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அலி காமேனியின் கொள்கைகளைப் பின்பற்றக்கூடிய ஒரு புதிய ஈரானியத் தலைவரை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ள ட்ரம்ப், இந்த விடயத்தில் ஈரானியர்கள் தனது நேரத்தை வீணடிக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

காமேனியின் மகன் மிகவும் இலகுவாக கையாளப்படக்கூடியவர். அவரை ஈரான் உயர் தலைவராக தெரிவு செய்வது, அமெரிக்காவை 5 ஆண்டுகளில் மீண்டும் போருக்குத் தள்ளும். எனவே, ஈரானின் புதிய உயர் தலைவராக மொஜ்தபா காமேனியை ஏற்க முடியாது.

வெனிசுவெலாவில் நடந்தது போல, ஈரானிலும் புதிய தலைவர் நியமனத்தில் நான் தனிப்பட்ட முறையில் ஈடுபடவேண்டும்.

ஈரானில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் கொண்டுவரக்கூடிய ஒருவரை நாங்கள் விரும்புகிறோம்.

ஈரானை வழிநடத்த பகுத்தறிவு மற்றும் விவேகம் உள்ள ஒருவரை நியமிக்க வேண்டும் என்றார்.