டாக்கா,வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா. கடந்த 2024-ம் ஆண்டு அங்கு நடந்த மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து அவருடைய ஆட்சி கவிழ்ந்தது.
ஷேக் ஹசீனா அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந் தார். இதனிடையே அந்த நாட்டின் பிரதமராக தாரிக் ரகுமான் பொறுப்பேற்றதை தொடர்ந்து அவாமி லீக் தலைவர்கள் மீதான கைது நடவடிக்கை மேலும் வலுப்பெற்றுள்ளது. .
அந்த வகையில் அவாமி லீக் கட்சியின் பெண் தலைவராக இருந்த ஷிரின் ஷார்மின் சவுத்ரி நேற்று டாக்காவில் அவருடைய வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். மாணவர்கள் போராட்ட வன்முறை தொடர்பாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
.கடந்த 2013-ம் ஆண்டு அன்று வங்காளதேச நாடாளுமன்றத்தின் முதல் பெண் சபாநாயகராக பொறுப்பேற்று வரலாறு படைத் தார். 4 முறை தொடர்ச்சியாக சபாநாயகராகப் பணியாற்றிய அவர், 2024-ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.





