வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாஹ் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த நபரொருவர் நேற்று திங்கட்கிழமை (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை துறைமுகத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை (12) சென்ற நபரே இவ்வாறு காணாமல் போயுள்ள நிலையில், வாழைச்சேனை துறைமுகப் பகுதியில் தரித்து நின்ற அவரது இயந்திரப் படகில் காணாமல் போயிருந்த குடும்பஸ்தரின் பாதணிகள் கிடப்பதைக் கண்டு தேடுதலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
இவ்வாறான நிலையில் காணாமல் போயிருந்த படகு உரிமையாளர் 32 வயதுடையவர் எனவும் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வாழைச்சேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.




