தமிழகம் முழுவதும் 3 லட்சம் அரசு ஊழியர்கள் தபால் வாக்குகளை செலுத்தினர்

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலின் ஒரு பகு​தி​யாக வாக்​குச்​சாவடி அலு​வலர்​கள் உள்​ளிட்ட பல்​வேறு தரப்​பினருக்கு பயிற்சி வழங்​கப்​பட்டு வரு​கிறது.

வாக்​குச்​சாவடி தலைமை அலு​வலர்​கள் மற்​றும் வாக்​குப்​ப​திவு அலு​வலர்​களுக்கு மாநிலம் தழு​விய 2-ம் கட்ட தேர்​தல் பயிற்சி நேற்று நடத்​தப்​பட்​டது.

இதில் வாக்​குப்​ப​திவு அலு​வலர்​களின் கடமை​கள், பணி​கள், பொறுப்​பு​கள் தொடர்​பான தலைப்​பு​களி​லும், மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களை கையாள்​வது குறித்த நேரடிப் பயிற்​சி​யும் அளிக்​கப்​பட்​டது. மேலும், வாக்​குப்​ப​திவு அலு​வலர்​கள் தங்​களின் வாக்​கு​களை தபால் வாக்​குச்​சீட்டு மூலம் பதிவு செய்​வதற்​கான வசதி​யும் ஏற்​படுத்​தித் தரப்​பட்​டது.

சுமார் 3 லட்​சம் வாக்​குப்​ப​திவு அலு​வலர்​கள் ‘படிவம் 12’ வாயி​லாக தபால் மூலம் வாக்​களிக்க விண்​ணப்​பித்​துள்​ளனர்.

இப்​ப​யிற்சி மையங்​களி​லேயே அவர்​கள் தங்​களது தபால் வாக்​குச்​சீட்​டு​களைப்பெற்​று, அங்​கேயே வாக்​கு​களைப் பதிவு செய்ய ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது. அதன்​படி தமிழகம் முழு​வதும் நேற்று சுமார் 3 லட்​சம் பேர் தங்​கள் தபால் வாக்​கு​களை செலுத்​தினர்.

முந்​தைய நடை​முறைப்​படி, தேர்​தல் பணி​யாளர்​கள் தபால் வாக்​குச்​சீட்டை தங்​கள் வீட்​டுக்கு எடுத்​துச் சென்​று, பின்​னர் தபால் மூலம் அனுப்பி வைப்​பது வழக்​க​மாக இருந்​தது.

தற்​போது அதற்​கென அமைக்​கப்​பட்ட வாக்​களிப்பு மையங்​களி​லேயே தங்​கள் வாக்​கு​களைப் பதிவு செய்​யும் வகை​யில் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது என்று தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார்.

புரோ மாடியூல் பரிசோதனை

தேர்​தல் நாளன்​று, 2 மணி நேரத்​துக்கு ஒரு​முறை வாக்​குப்​ப​திவு சதவீத விவரங்​களை புதுப்​பிக்க, வாக்​குச்​சாவடி தலைமை அலு​வலர்​களுக்கு உதவும் வகை​யில், இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யம் தனது ‘இசிஐநெட்’ செயலித் தொகுப்​பில் புரோ மாடியூல் (PRO Module) என்ற தொகுதி ஒன்றை உரு​வாக்​கி​யுள்​ளது.

இது நேற்று பரிசோதனை செய்து பார்க்​கப்​பட்​டது. தமிழகத்​தில் 85 வயதுக்கு மேற்​பட்ட 4 லட்​சம் வாக்​காளர்​கள், 4.63 லட்​சம் மாற்​றுத் திற​னாளி​கள் உள்​ளனர். இவர்​களில் 1.20 லட்​சம் முதி​யோர், 70 ஆயிரம் மாற்​றுத் திற​னாளி​கள் என மொத்​தம் 1.90 லட்​சம் பேர் ‘12-டி’ படிவம் பெற்​று, தபால் வாக்கு செலுத்த விருப்​பம் தெரி​வித்​திருந்​தனர்.

இவர்​களும் கடந்த சில நாட்​களாக தங்​கள் வீட்​டில் இருந்​த​வாறே தபால் வாக்​கு​களை செலுத்தி வரு​கின்​றனர். தேர்​தலில் தலா 75,164 கட்​டுப்பாட்டு இயந்​திரங்​கள் மற்​றும் விவி​பாட் இயந்​திரங்​கள் பயன்​படுத்​தப்பட உள்​ளன.

வாக்​குப்​ப​திவுக்கு 1 லட்​சத்​துக்கு மேற்​பட்ட இயந்​திரங்​கள் பயன்​படுத்​தப்பட உள்​ளன. ஓர் இயந்​திரத்​தில் 16 வேட்​பாளர்​களின் பெயர்​கள் இடம்​பெறும். இத்​தேர்​தலில் தமிழகம் முழு​வதும் 4,023 வேட்​பாளர்​கள் போட்​டி​யிடு​கின்​றனர்.

இவர்​களது பெயர்​கள், சின்​னங்​களை வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் பொருத்​தும் பணி, அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்​சிப் பிர​தி​நி​தி​கள் முன்​னிலை​யில், அந்​தந்த தொகுதி தேர்​தல் நடத்​தும் அலு​வலர்​கள் தலை​மை​யில் இன்று நடை​பெறுகிறது.