ஹூக்ளி நதிப் பயண வேளையில் படகோட்டியை கட்டியணைத்த மோடி

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவுக்கு சமீபத்தில் சென்றிருந்த இந்திய பிரதமர் நரேந்தர மோடி, ஹூக்ளி நதியில் பயணித்தவேளையில், தான் சந்தித்த படகோட்டியை கட்டியணைத்து அன்பு பகிர்ந்த காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தேர்தல் பிரச்சாரத்துக்காக கொல்கத்தாவுக்கு மோடி சென்றிருந்தபோது, அங்கு ஹூக்ளி நதியில் படகில் பயணித்தார்.

அப்போது அந்த படகை செலுத்திய படகோட்டியை கட்டியணைத்து, அன்பாக பேசி, அவருக்கு 1000 ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.

அப்போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் சில புகைப்படங்களையும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது,

இன்று காலை கொல்கத்தாவில் ஹூக்ளி  நதிக்கரையில் சிறிது நேரம் செலவிட்டேன். இது அன்னை கங்கைக்கு நன்றி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்தது.

படகோட்டிகளை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அவர்களின்க கடின உழைப்பு போற்றத்தக்கது. காலை நடைப்பயிற்சி செய்பவர்களையும் சந்தித்தேன். ஹூக்ளி நதிக்கரையில் உண்மையிலேயே ஒரு மிகச் சிறப்பான காலைப்பொழுது அமைந்தது,

இந்த மாபெரும் நதியைப் புகைப்படம் எடுக்க முயன்றேன். வித்யாசாகர் சேது மற்றும் ஹவுரா பாலத்தையும் அருகில் கண்டேன். ஒவ்வொரு மேற்கு வங்க மாநில மக்கள் மனதிலும் கங்கை ஒரு மிகச் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது.

தெய்வீக நீர் ஒரு முழு நாகரிகத்தின் காலத்தால் அழியாத ஆன்மாவைத் தாங்கிச் செல்கிறது என்று மோடி பதிவிட்டிருந்தார்.