லெபனான், இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போர்நிறுத்தம் நடைமுறையில் உள்ள நிலையில், மேலும் 45 நாட்களுக்கு போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கையில், இரு நாடுகளுக்கு இடையிலான போர்நிறுத்தம் ஏப்ரல் 16ஆம் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில், அது, மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என்றார்.
இதனையடுத்து, இஸ்ரேல் – லெபனான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜூன் 2, 3 ஆகிய திகதிகளில் நடைபெறும் என்றும் அதற்கு முன்னதாக எதிர்வரும் 29ஆம் திகதி இரு நாடுகளின் இராணுவ பிரதிநிதி குழுக்களை ஒன்றிணைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



