முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு வாரத்தையொட்டி யாழ். உரும்பிராயிலுள்ள தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளர்
தியாகி.பொன்.சிவகுமாரனின் நினைவுத் தூபியின் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (15.05.2026) பிற்பகல்-01.30 மணி முதல் கொட்டும் மழைக்கு மத்தியிலும் மக்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறப்பட்டது.
தமிழ்தேசிய இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறினர்.




