2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை ஜூன் மாத நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை முடிவுகள் விரைவில் வெளியாகவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் குறித்து பதிலளித்த பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே, முடிவுகள் வெளியிடப்படும் திட்டவட்டமான திகதியை தற்போது அறிவிக்க முடியாது எனத் தெரிவித்தார்.
இருப்பினும், ஜூன் மாத நடுப்பகுதியில் சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையானது கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெற்றதுடன், இதற்காக 451,463 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
அவர்களில் 382,249 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் எனவும், 69,214 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள் எனவும் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.





