ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. அமெரிக்காவுடனான மோதலை தொடர்ந்து ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.
அதேவேளை, ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முடக்கியது. இதனால் ஈரானுக்கு சரக்கு, கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்வது பாதிக்கப்பட்டது.
இதனிடையே, அமெரிக்கா, ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. பின்னர், இரு நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது..அமைதி பேச்சுவார்த்தைஇந்நிலையில், அமெரிக்கா – ஈரான் இடையிலான 14 அம்சங்கள் கொண்ட அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இரு தரப்பினரும் ஒப்பந்தத்தில் டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டதை அடுத்து, அமெரிக்க-ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட்டது.பேச்சுவார்த்தையில் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதாக வெள்ளை மாளிகை தனது எக்ஸ் வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் ஆகியோர், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) முறைப்படி கையெழுத்திட்டுள்ளனர்.
அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து ஈரான் மறுகட்டமைப்புக்கு ரூ.28 லட்சம் கோடி நிதி உதவி அளிக்கப்படுமென்பது உட்பட 14 அம்ச அறிக்கையை அமெரிக்க அரசு வெளியிட்டது. .
வெள்ளை மாளிகைஜனாதிபதி டொனால்டு டிரம்ப், வெர்சாய்ஸ் அரண்மனையில் நேற்று இரவு நடைபெற்ற இரவு விருந்தின்போது அமெரிக்க-ஈரான் ஒப்பந்தத்தின் அசல் பிரதியிலும் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டுள்ளார்.
மேலும், இரவு விருந்து மேசையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் இருந்த கையெழுத்திடும் நிகழ்வின் காணொளியை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க மற்றும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்த தகவல்படி, இந்த ஆவணம் முதலில் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரானின் தலைமை பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் கலிபாப் ஆகியோரால் மின்னணு முறையில் கையெழுத்திடப்பட்டது. பின்னர் புதன்கிழமை (நேற்று) இரு அதிபர்களாலும் டிஜிட்டல் முறையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வந்தது. இதன்மூலம், இந்த வார இறுதியில் சுவிட்சர்லாந்தில் முறைப்படி கையெழுத்திடும் விழா நடத்துவதற்கான திட்டங்கள் மாற்றப்பட்டன.
.முடிவுக்கு வரும் போர்இதன் மூலம் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா, ஈரான் இடையே நிலவி வந்த மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, துருக்கி உள்பட பல்வேறு நாடுகளின் முயற்சியால் ஈரான், அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
அமைதி ஒப்பந்தப்படி இரு நாடுகளும் மோதலை நிரந்தரமாக கைவிட வேண்டும். ஈரான் துறைமுகங்களை முடக்கியுள்ள அமெரிக்க படைகள் உடனடியாக திரும்பப்பெறப்பட வேண்டும்.
ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும். இது கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வர வழிவகுக்கும். .இந்த ஒப்பந்தப்படி, அனைத்து தரப்பும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான 60 நாட்களில் ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் அனைத்தும் இரு தரப்பும் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுதக்குழு மீதான தாக்குதலையும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலக நாடுகள் வரவேற்புஇந்த நிலையில், அமெரிக்கா – ஈரான் இடையே கையெழுத்தாகியுள்ள அமைதி ஒப்பந்தத்திற்கு ஐநா அமைப்பு, மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல்வேறு தரப்பும் வரவேற்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்து பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தன.





