என்புக்கூடுகள் யாருடையவை என அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து முடக்கத்தில்!

செம்மணி மனித புதைகுழிக்குள்ளிருந்து தொடர்ச்சியாக என்புக்கூடுகள் எடுக்கப்படுகின்றனவே தவிர, அவை யாருடையவை என்பதை அடையாளம் காணும் பணிகள் ஓராண்டாகியும் இன்னும் முடக்கப்பட்டே உள்ளன என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர், நாளைய தினம் வெள்ளிக்கிழமை (19) செம்மணிக்கு வருகை தரும் நீதி அமைச்சர், அகழ்ந்து எடுக்கப்பட்ட என்புத் தொகுதிகள் யாருடையவை என்பதை கண்டறிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த கொடூர குற்றங்களுக்குக் காரணமானவர்களுக்கு எதிராக தாமதமின்றிச் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக செம்மணி பகுதியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.