யாழ்.அரியாலை நெளுக்குளம் பகுதியில் புகையிரதத்துடன் மோதி இராணுவச் சிப்பாய் ஒருவர் இன்று வியாழக்கிழமை (18.06.2026) உயிரிழந்துள்ளார். பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை சேர்ந்த 26 வயதுடைய நிரோஷன் லக்மால் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இராணுவச் சிப்பாய் விடுமுறையில் வீட்டுக்குச் சென்ற நிலையில் விடுமுறைக் காலம் முடிவடைந்த பின்னரும் நீண்ட காலம் கடமைக்குத் திரும்பாது இன்று மீண்டும் கடமைக்குத் திரும்பிய வேளை பலாலி இராணுவ அதிகாரிகள் நீண்ட காலம் கடமைக்குத் திரும்பாமை குறித்துக் கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்துக்குச் சென்று
விளக்கம் கொடுக்குமாறு பணித்த நிலையில் சிப்பாய் பலாலியிலிருந்து வெளியேறி அரியாலை நெளுக்குளம் பகுதியில் புகையிரத்துடன் மோதி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






