நல்லூர்ப் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

வியாழக்கிழமை (18.06.2026) மற்றும் வெள்ளிக்கிழமை (19.06.2026) ஆகிய தினங்களில் யாழ் திருநெல்வேலிச் சந்திக்கு அருகில் ஆடியபாதம் வீதிப் பகுதியில் தார்ப் படுக்கை இடும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன்காரணமாக ஆடியபாதம் வீதியின் ஒருபகுதி குறிப்பிட்ட இரு தினங்களிலும்  போக்குவரத்துக்காக முழுமையாக மூடப்பட்டிருக்கும். பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், பணிகள் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பை வழங்குமாறும் நல்லூர்ப் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரன் கேட்டுள்ளார்.