அர்ச்சுனாவின் உருவப் பதாகைக்குச் செருப்பு மாலை : நேரில் சென்று பதாகையை கிழித்தெறிந்த அர்ச்சுனா!

யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் உருவப் பதாகை காட்சிப்படுத்தப்பட்டு, அந்தப் பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிறிது நேரத்தில் அர்ச்சுனா அந்த பதாகையை தானே கிழித்து, தனது காரில் எடுத்துச் சென்றுள்ளார்.

யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (19) அர்ச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகை வைக்கப்பட்டு, அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் தகாத வார்த்தை பிரயோகங்கள், சபை நாகரிகமின்றி செயற்படுதல், கூட்டங்களை குழப்புதல் போன்ற செயல்களில் அர்ச்சுனா இராமநாதன் செயற்பட்டு வருவதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்றைய தினம் இடம்பெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் மிக மோசமான வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டு இருந்தமை தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அர்ச்சுனாவின் 10 அடி உயர பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, பிரதான வீதியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காலை 10 மணியளவில் பதாகை வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு தனது காரில் வந்த அர்ச்சுனா இராமநாதன், பதாகையை கிழித்தெடுத்து, தனது காரில் எடுத்துச் சென்றுள்ளார்.

சமீபத்திய செய்திகள்