கலை, இலக்கியம், சமூக சேவை, வைத்தியம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ போன்ற பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி இந்த ஆண்டும் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு 5 பத்ம விபூஷண் விருதுகள், 13 பத்மபூஷண் விருதுகள் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் என மொத்தம் 131 விருதுகளை உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இதில் முதற்கட்டமாக கடந்த மாதம் 25 ஆம் திகதி 66 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக இன்று 65 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. டெல்லியில் இந்திய ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்று வரும் இந்த விருது வழங்கும் விழாவில் இந்தியப் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
நடிகர் மம்முட்டி, மாதவன், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ், தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம், சிற்பக் கலைஞர் ராஜஸ்தபதி கலியப்ப கவுண்டர் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கி இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு கௌரவித்தார்.





