ஆப்கானிஸ்தானில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; டெல்லி, காஷ்மீரிலும் அதிர்வு உணர்வு

ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை (27) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், இந்தியாவின் டெல்லி மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் இரவு 7.04 மணியளவில் பதிவாகியுள்ளதுடன், ரிச்டர் அளவுகோலில் அதன் தீவிரம் 6.2 ஆக அளவிடப்பட்டுள்ளது.

தேசிய நிலநடுக்க அறிவியல் மையத்தின் தகவலின்படி, நிலநடுக்கத்தின் மையம் பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 215 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.