நாடகவியலாளர் க.பாலேந்திரா சிறப்பிதழாக வெளிவந்த ஜீவநதி பற்றிய ஒரு சிறப்புப் பார்வை என்ற தலைப்பில் இலக்கியச் சந்திப்பு புதன்கிழமை (08.07.2026) மாலை-04 மணியளவில் இல-18/2, திருவடிநிழல், அம்மன் வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள எங்கட புத்தகங்கள் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.
பேராசிரியர்.கந்தையா ஸ்ரீ கணேசன் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் ஜோ.யோன்சன் ராஜ்குமார், சட்டத்தரணி சோ.தேவராஜா, தவபாலசிங்கம் துலக்க்ஷன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
நாடக எழுத்துரு வாசிப்பும் பதில் அளிக்கையும் என்ற நிகழ்வில் க.பாலேந்திரா மற்றும் திருமதி.ஆனந்தராணி பாலேந்திரா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.






