யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைப் பேராசிரியர்.சிவசுப்பிரமணியம் ரகுராம் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் தொடர்ந்த வழக்கு கட்டளைக்காகத்
எதிர்வரும்திங்கட்கிழமை தவணையி டப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறைப் பேராசிரியர்.சிவசுப்பிரமணியம் ரகுராம் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 14 எதிர் மனுதாரர்களுக்கு நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு வெள்ளிக்கிழமை (10.07.2026) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிவான் இந்துகா சிவலிங்கம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கினை எடுத்துக் கொண்ட நீதவான் எதிர்வரும் திங்கட்கிழமை நிபந்தனை உடனான கட்டளை ஒன்றைப் பிறப்பிப்பது தொடர்பிலா ன தீர்மானத்திற்காக வழக்கைத் தி கதியிட்டார்.மனுதாரர் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸ் சார்பில் சட்டத்தரணி கனகலிங்கம் கிஷோபனா ஆஜராகித் தமது வாதங்களை முன்வைத்தார்.





