கம்பளை மகாவலி ஆற்றில் ஆணின் சடலம் மீட்பு

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போத்தலாப்பிட்டிய – பாத்திமா காடன் பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்த பொதுமக்கள், சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம், நாவலப்பிட்டி சேலம்பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்த சுமார் 48 வயதுடைய ஆண் ஒருவருடையது என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் மேலதிக விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகளுக்காக கம்பளை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மரணம் தொடர்பான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.