எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (27) திங்கட்கிழமை மாலை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

South Asians & Diaspora

இச்சந்திப்பின் போது, மலையக பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள், சவால்கள் மற்றும் அவர்களின் நலன்கள் தொடர்பிலும், நாட்டின் சமகால அரசியல், பொருளாதார, சமூக விவகாரங்கள் தொடர்பிலும் இங்கு இரு தரப்பினரும் பரஸ்பரம் சிநேகபூர்வமாக கலந்துரையாடியுள்ளனர்.