பாகிஸ்தானில் சோதனைச் சாவடி மீது ட்ரோன் தாக்குதல்

பாகிஸ்தானில் பொலிஸ் சோதனைச் சாவடியின் மீது பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 11 பொலிஸார் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் 15 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

கைபர் பக்துன்க்வாவில் உள்ள ஹங்கு மாவட்டத்தில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள சோதனைச் சாவடி மீது நேற்று (30) பயங்கரவாதிகள் இந்த ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டனர்.

வெடிமருந்துகளால் நிரப்பப்பட்ட ட்ரோன்களைக் கொண்டு பயங்கரவாதிகள் தாக்கியதைத் தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதலின்போது பொலிஸ் வாகனங்கள் மூன்று தீக்கிரையாக்கப்பட்டன.

பல மணிநேரம் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 11 பொலிஸார் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நடத்தப்பட்ட தாக்குதலில் பொலிஸ் உதவி ஆய்வாளர் தியார் கானும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு இத்தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.