காணாமல்போன வெளிநாட்டு பிரஜை யாழில் கண்டுபிடிப்பு

அநுராதபுரத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் காணாமல்போன நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) அவர் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

மூன்று சுற்றுலாப் பயணிகள் பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த நிலையில் அவர்களில் ஒருவர் நேற்று (28) காணாமல் போயுள்ளார்.

இந்த சம்பவம்  குறித்து அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த வெளிநாட்டு பிரஜை  யாழ்ப்பாணம்  பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் யாழ். நகரப் பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.