பொல்லால், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த மருமகன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

களுத்துறை பதுரலிய – சீலதொல பகுதியில் மாமனார் மற்றும் மைத்துனரால் பொல்லால், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த மருமகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை (29) உயிரிழந்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பதுரலிய – பதுருகல்லவத்த பகுதியை சேர்ந்த 32 வயதுடைய மருமகனே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சம்பவத்தன்று, உயிரிழந்த மருமகன் முன்விரோதம் காரணமாக தனது மாமனார் மற்றும் மைத்துனரை கடும் வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனால் கோபமடைந்த மாமனாரும் மைத்துனரும், மருமகனையும் மகளையும்  பொல்லால் மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் பதுரலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நாகொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது மருமகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சந்தேக நபர்களான மாமனாரும் மைத்துனரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மொரப்பிட்டிய பகுதியைச்  சேர்ந்த 36 மற்றும் 72 வயதுடையவர்களாவர்.

இந்த சம்பவம் தொடர்பில் பதுரலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.