கண்டி மத்திய சந்தையில் நிறுவையில் மோசடிகள் ; 27 வர்த்தர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

கண்டி மத்திய சந்தையில் அளவு நிறுவையில் மோசடி செய்துள்ள 27 வர்த்தகர்களுக்கு எதிராக கண்டி அளவீட்டு அலகு நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம்  மற்றும் நுகர்வோர் அதிகார சபை ஆகியன இணைந்து சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

கண்டி பொலிஸாரின் உதவியுடன் கடந்த 01ம் திகதி கண்டி  மத்திய பொது  சந்தை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட  திடீர்  சோதனையின் போது சில வர்த்தகர்கள் தமது வியாபாரப் பொருட்களை அவ்விடங்களில் வைத்துவிட்டு தராசுகளுடன் தப்பிச் சென்றுள்ளதாகவும்  இன்னும் சிலர் குளிர்சாதனப் பெட்டிகளில்  தராசு மற்றும் அதன்  அளவீட்டு உபகரணங்களை மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும்  மேற்படி திணைக்களத்தின்  கண்டி உதவி  அத்தியட்சகர் ஏ. ஜி. எஸ். ஆரியபால தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தொடர்பாக, தரமற்ற தராசு  மற்றும் அளவீட்டு கருவிகளை பதிவு செய்யாமல், எடை குறைவாக விற்பனை செய்தல், உற்பத்தி தேதி அல்லது காலாவதி தேதி குறிப்பிடாமல் உணவு விற்பனை செய்தல், விலையை காட்டாமல் இருப்பது, மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்தல் மற்றும்  அவ்வாறான பல குற்றங்கள் தொடர்பில்  வர்த்தகர்கள் மீது  வழக்குப்பதிவு செய்ய உள்ளதாக சம்பந்தப்படட அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய மார்க்கெட்டில் உள்ள பல மீன்  சந்தையிலுள்ள பல கடைகளில்   நிர்ணயிக்கப்பட்ட எடையை விட அதிக எடை கொண்ட அளவுகள் இருந்தன. எனவும் அறியவருகின்றன.

கண்டி பொலிஸ் தலைமையக கட்டளை அதிகாரி  ரசிக சம்பத்  உள்ளிட்ட குழுவினரும் இச்சோதனையில் கலந்து கொண்டதுடன், வாடிக்கையாளர்களைச் சுரண்டி வியாபாரம் செய்யும் வர்த்தகர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக தொடர்ச்சியாக இந்தச் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.