சிறப்பாக இடம்பெற்ற கீரிமலை நகுலேஸ்வரர் தேர்த் திருவிழா

ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாக விளங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலேஸ்வரம் நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் முத்தேர் பவனி மகாசிவராத்திரி நாளான  புதன்கிழமை (26.02.2025) மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

பலநூற்றுக்கணக்கான அடியவர்கள் இவ் ஆலயத் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டனர்.