சிலாபம் – புத்தளம் பிரதான வீதியில் வயோதிபரின் சடலம் மீட்பு!

சிலாபம் – புத்தளம் பிரதான வீதியில் தெதுறு ஓயா பாலத்திற்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை (08) மாலை வயோதிபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட வயோதிபர் தொடர்பில் எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

60 முதல் 70 வயது மதிக்கத்தக்க வயோதிபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வயோதிபரின் சடலம் சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்