“தமிழ் மரபுத்திங்கள் 2025” நிறைவு விழா

கனடாவில் வாழும் தமிழ் மக்களால் தைத் திங்கள் முழுமையும் கொண்டாடப்பட்டுவரும் “தமிழ் மரபுத்திங்கள்” விழாவின் நிறைவுநாள் எதிர்வரும் பெப்ரவரி 1, 2025 அன்று காலை 11 மணிமுதல் இரவு 8 மணிவரை பேரெழுச்சியுடன் கொண்டாடப்படவுள்ளது.
இந்நிகழ்வை தமிழ் மரபுத்திங்களின் உருவாக்கத்திலும் அதன் அங்கீகாரத்துக்குமாக உழைத்த கனடா தமிழ்க் கல்லூரி, அறிவகம் மற்றும் கனடியத் தமிழர் தேசிய அவை ஆகியவற்றோடு இணைந்து கனடாத்தமிழர் மரபியல் நடுவம் முன்னெடுக்கின்றது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர், தமிழறிஞர், ஆசிரியர், பெற்றோர், அரசியலாளர் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பங்கு கொண்டு சிறப்பிக்கும் இந்நிகழ்வில், தாங்களும் தங்கள் ஊடகத்தாரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு வேண்டுகிறோம்.
நன்றி.
TAMIL HERITAGE MONTH CLOSING CEREMONY
DATE: February 1, 2025
TIME: 11:00 AM – 8:00PM
VENUE: 
Markham Convention Centre, 2901 Markham Rd, Toronto, ON M1X 0B6