ரோட்டரி இலங்கை மாவட்ட – 3220 ஆளுநர் சுசேனா ரணதுங்க நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) அன்று திருகோணமலை ரோட்டரி கழகத்துக்கு விஜயம் செய்தார்.
ஆளுநரின் செயலாளர் காமினி மடநாயகே, உதவி.ஆளுநர் G. ஜெயபாலச்சந்திரன் ஆகியோர் இணைந்து கொண்டனர்.
ஆளுநர் ஜெரோம் ராஜேந்திரம் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைககளை பாராட்டியதுடன் மேலும் “லிட்டில் ஹார்ட்’, “தற்கொலை தடுப்பு” போன்ற ரோட்டரி தேசிய நிகழ்ச்சிகளை விளக்கினார்.
ஆளுநர் ஜெரோம் ராஜேந்திரம் தனது விஜயத்தின் போது, நிலாவெளி கோபாலபுரத்தில் உள்ள மகளிர் கிராம அபிவிருத்திச் சங்க மீன்பிடி அமைப்புகளுக்கு வலைகளுடன் கூடிய 10 மீன் பிடி படகுகளை (கேனோன்- Canoes) கையளித்தார்.
திருகோணமலை ரோட்டரி சங்கத்தினால் PP PHF அகிலனின் நிதியில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தை தபால் நிலைய சந்தியில் அவர் திறந்து வைத்தார். திருகோணமலை ரோட்டரி சங்கத்தினால் பராமரிக்கப்படும் மான்கள் சரணாலயதையும் பார்வையிடார்.








