சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 59 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று திங்கட்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம், சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய வர்த்தகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் துபாயிலிருந்து இன்றைய தினம் காலை 08.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 39,800 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 199 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.



