நீர் தொட்டிக்குள் ஆயுதங்கள்! – வாழைத்தோட்டத்தில் காவல் துறை அதிரடி!

வாழைத்தோட்டம் – சஞ்சியாராச்சிவத்த பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் கைவிடப்பட்ட நீர் தொட்டியில் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) மாலை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த துப்பாக்கி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளதுடன், அதனுடன் 29 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டதாக வாழைத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவை சிறிது காலத்திற்கு முன்பு அங்கேயே கைவிடப்பட்டதாகவும், அதன் சில பாகங்கள் அழுகிய நிலையில் காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.குறித்த ஆயுதத்தை கொண்டுவந்து வைத்த சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க வாழைத்தோட்டம்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.