உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில், கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான மேலதிக பரிசீலனை இன்று (24) புதன்கிழமை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகள் மற்றும் அது தொடர்பான நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இன்றைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



