வவுனியா மாவட்டத்தின் ஓமந்தை பிரதேச வைத்தியசாலைக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் செவ்வாய்க்கிழமை (04) களவிஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி, ஊழியர்கள், வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினர் ஆகியோரை சந்தித்து வைத்தியசாலையின் அவசர தேவைப்பாடுகள், எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது வைத்தியசாலை தரப்பினரால் முன்னிலைப்படுத்தப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது தெரிவித்தார்.
இந்த விஜயத்தின்போது வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினர் கந்தசாமி சிவபாலன், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் பாலச்சந்திரன் சிந்துஜன் ஆகியோரும் இணைந்திருந்தனர்.





