கண்டியில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதை ஒழிப்பு தொடர்பான விழிப்பணர்வு வேலைத் திட்டம் ஒன்றின் போது ஊர்வலம் மற்றும் விழிப்பணர்வு பொதுக் கூட்டம் என்பன சனிக்கிழமை (23) இடம் பெற்றன.
”முழுநாடும் ஓரணியில் இணைவோம்’ மற்றும் ‘தேசியப் பணிக்காக நாடு முழுவதும் ஒன்று கூடுவோம்“ என்பது போன்ற இளைஞர் கோஷங்களை அடிப்படையாகக் கொண்டு இது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
கண்டி போகம்பறைப் பிரதேசத்தில் இருந்து ஆரம்பித்து கண்டி ‘சஹஸ் உயன’ பூங்கா வரை பேரணி இடம் பெற்று இறுதியில் பொதுக் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது.
புகைத்தல் மற்றும் போதைப் பாவனை, போன்ற சமூக துஷ்பிரயோக நடவடிக்கைகள் தொடர்பாக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் அதற்கு எதிராக விழிப்புணர்வுகள் வேலைத்திட்டங்கள் பல முன் எடுக்கப்பட்டன.







