சாவகச்சேரி நகரசபை உபதவிசாளரின் பதவி வறிதாக்கப்பட்டமையும், நகரசபை உறுப்புரிமை நீக்கப்பட்டமையும் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனின் ஜனநாயக விரோதச் செயற்பாடாகும்.
எனவே, செவ்வாய்க்கிழமை (28.07.2026) நடைபெறவுள்ள சாவகச்சேரி நகரசபைக்கான புதிய உபதவிசாளர் தெரிவு தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பாகவுள்ள ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி எடுக்கும் நிலைப்பாட்டை ஆதரித்து தமிழ்த்தேசியப் பேரவை செயற்படுமெனத் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.





