சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு இடையில் மாகாண விளையாட்டுப் போட்டி

வடக்கு மாகாண வரலாற்றில் முதற்தடவையாக சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கு இடையிலான மாகாண விளையாட்டுப் போட்டி – 2026 வடக்கு மாகாண நன்னடத்தைப் பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்புச் சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (11.07.2026) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

சிறுவர் இல்லங்களில் வாழும் பிள்ளைகளின் விளையாட்டுத் திறன்களை ஊக்குவிக்கும் நோக்கில், மாகாண மட்டத்தில் இவ்வாறானதொரு பிரமாண்டமான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் முறையாகும். மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 29
சிறுவர் அபிவிருத்தி நிலையங்களைச் சேர்ந்த சுமார் 1100 சிறுவர்கள் இந்த விளையாட்டு விழாவில் பெருமகிழ்ச்சியுடன் பங்கேற்றிருந்தனர்.