குடும்பநலச் சுகாதார உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பையும் , தொழில்முறைச் சேவையையும் பாராட்டிக் கௌரவிக்கும் நோக்கில் குடும்பநலச் சுகாதார உத்தியோகத்தர்கள் தினம் திங்கட்கிழமை (06.07.2026) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்வில் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் பங்கேற்றுக் குடும்பநலச் சுகாதார உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டி அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவித்தனர்.







