குற்ற வழக்குகளில் சாட்சியாக உள்ள குழந்தைகளைப் பாதுகாக்கும் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளின் நிலை என்ன?

குற்ற வழக்​கு​களில் முக்​கிய சாட்​சிகளாக உள்ள குழந்​தைகளின் நலனைப் பாது​காக்​கும் வரைவு வழி​காட்டு நெறி​முறை​களின் தற்​போதைய நிலை என்ன? என்​பது குறித்து தமிழக அரசு மற்​றும் போலீ​ஸார் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

குற்ற வழக்​கு​களில் முக்​கியசாட்​சிகளாக உள்ள குழந்​தைகள் மற்​றும் சிறார்​களின் நலனைப் பாது​காக்க உரிய வரைவு வழி​காட்டு நெறி​முறை​களை வகுக்​கக் கோரி, உயர் நீதி​மன்​றத்​தில் ஏற்​கெனவே வழக்கு தொடரப்​பட்​டிருந்​தது.

இந்த வழக்​கின் முந்​தைய விசா​ரணை​யின்​போது, இது தொடர்​பாக வரைவு வழி​காட்டு நெறி​முறை​கள் வகுக்​கப்​பட்டு தயார் நிலை​யில் உள்​ளன என்​றும், முறை​யான அரசாணைக்​காக காத்​திருப்​ப​தாக​வும் அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

அதையடுத்து வரைவு நெறி​முறை​கள் குறித்து பொது​மக்​கள், தொண்டு நிறு​வனங்​களும் கருத்​துகளை தெரிவிக்​கும் வண்​ணம் குழந்​தைகள் பாது​காப்பு தகவல் மேலாண்மை மற்​றும் கண்​காணிப்பு அமைப்​பின் இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டிருந்​தது.

இந்​நிலை​யில் இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் மற்​றும் நீதிபதி சுந்​தர் மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது ‘துளிர்’ என்ற தொண்டு நிறு​வனம் சார்​பில் ஆஜரான வழக்​கறிஞர் வித்யா ரெட்​டி, “இந்த வரைவு வழி​காட்டு நெறி​முறை​களில் இன்​னும் சில முக்​கிய​மான விதி​முறை​களைச் சேர்க்க வேண்​டும்” என்​றார்.

இந்த வழக்​கில் நீதி​மன்​றத்​துக்கு உதவும் நபராக நியமிக்​கப்​பட்​டுள்ள மூத்த வழக்​கறிஞர் அபுடு​கு​மார் ராஜரத்​தின​மும் சில பரிந்​துரைகளை தெரி​வி்த்​தார்.