3 பேரை கடத்தி ரூ.70 லட்சம் கேட்டு சித்ரவதை: தாய்லாந்தில் 5 இந்தியர்கள் கைது

குறைந்த கட்​ட​ணத்​தில் சுற்​றுலா செல்ல விசா கிடைத்ததன் மூலம் 3 இந்திய இளைஞர்​கள் தாய்​லாந்து சென்றுள்ளனர். இந்த சுற்​றுலா​வுக்கு சுமார் ரூ.2 லட்​சம் செலுத்தி உள்​ளனர்.

கடந்த 21-ம் தேதி சுவர்​ணபூமி விமான நிலை​யத்​துக்கு வந்த அவர்களை, சுற்​றுலா ஏற்​பாடு செய்​தவர்​கள் என்று கூறி டாக்ஸி மூலம் பட்​டா​யா​வுக்கு அழைத்​துச் சென்​றுள்​ளனர். அங்கிருந்து மோட்டார் சைக்​கிளில் பாங் லாமுங் மாவட்​டத்​துக்கு அழைத்​துச் சென்​றுள்​ளனர்.

அங்கு அவர்​களின் கை, கால்​களை கட்​டிப் போட்டு சித்​ர​வதை செய்​துள்​ளனர். ரூ.70 லட்​சம் கொடுத்​தால் விடு​தலை செய்​வோம் என்​றும் கூறி​யுள்​ளனர். சம்பந்தப்பட்டவர்களின் வீடு​களுக்கு போன் செய்து கடத்தல் கும்பல் மிரட்​டி​யுள்​ளது

கடத்​தப்​பட்​ட​வர்​களின் பெற்​றோர் கொடுத்த புகாரின் பேரில் தாய்​லாந்து போலீ​ஸாருக்​குத் தகவல் தெரிவிக்​கப்​பட்டு 3 பேரும் மீட்​கப்​பட்​டுள்​ளனர்.

இதையடுத்து கடத்​தல் கும்​பலைச் சேர்ந்த அவதார் சிங், ஜக்​ஜித் சிங், ரம்​பாலக் குமார், சுக்​பிர் சிங், குல்ரா சிங் ஆகிய 5 இந்தியர்களை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர்.

மேலும் இந்த கடத்​தலின் முக்​கிய நபராக பாகிஸ்​தானைச் சேர்ந்த ஒரு​வர் இருந்​துள்​ளார் என்​பது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. அவர் மீது வழக்​குப் பதிவு செய்து அவரை தாய்​லாந்​து போலீ​ஸார்​ தேடி வரு​கின்​றனர்​.