“இன்னும் 10 ஆண்டுகளில் ஏஐ-யிடம் மனிதர்கள் கட்டுப்பாட்டை இழப்பர்” – எலான் மஸ்க் கருத்து

தொழில​திபர் எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பற்றி சமீபத்​தில் அளித்த பேட்​டி​யில் கூறியதாவது: இன்​னும் 10 ஆண்​டு​களில் மனிதர்​கள் ஏஐ-யிடம் தங்​கள் கட்​டுப்​பாட்டை இழப்​பார்​கள். 2036-ம் ஆண்​டுக்​குள் உலகம் ரோபோக்​கள் வசம் செல்​லும். ஏஐ மனிதகுலத்​தையே அழிப்​ப​தற்கு 10 முதல் 20% வாய்ப்​பு​கள் உள்​ளன.

அதி​கார அமைப்​பில் விரை​வில் மாற்​றம் ஏற்​படும். அடுத்த 5 ஆண்டு​களில் ஒட்​டுமொத்த மனிதகுலத்​தின் அறிவை​யும் ஏஐ விஞ்​சி​விடும். ஒரு விஷ​யத்தை மனிதர்​களை விட சிறப்​பாக ஏஐ மேற்​கொள்​ளும். ஏஐ உதவி​யால் மனிதர்​கள் அனை​வரும் நம்​ப​முடி​யாத அளவுக்கு முன்​னேற்​றம் அடைவர். வளம் பெறு​வர். நாம் இதன் நேர்​மறைப் பக்​கத்தை பார்க்க வேண்​டும். ஏஐ மற்​றும் ரோபோக்​களின் நம்​ப​முடி​யாத வேகத்தை உண்​மை​யிலேயே தடுப்​ப​தற்கு எந்த வழியை​யும் என்​னால் பார்க்க முடிய​வில்​லை. இவ்​வாறு அவர் கூறி​னார்.

ஓபன் ஏஐ நிறு​வனத்​தின் சி.இ.ஒ சாம் ஆல்ட்​மேன் சமீபத்​தில் அளித்த பேட்​டி​யில், ” ஏஐ அமைப்​பு​கள் அதிக திறன் வாய்ந்​த​தாக மாறும் ஒரு சகாப்​தத்​திற்​குள் மனிதகுலம் நுழைகிறது. ஏஐ மனிதர்​களை விட அதிக அறி​வாற்​றலுடன் செயல்​படும் கால​கட்டத்​தில் நாம் இருக்​கிறோம்” என்​றார். இதுபோல எதிர்​கால ஏஐ மாதிரி​கள் மனித தலை​யீடு இல்​லாமலேயே தங்​களை விட சக்​தி​வாய்ந்த அடுத்த தலை​முறை பதிப்​பு​களை வடிவ​மைத்​து, மேம்படுத்​தி, செயல்​படுத்​தக்​ கூடும்​ என்​று ‘ஆந்த்​ரோபிக்’ நிறுவனம் கூறி​யுள்​ளது.