தன்னைத்தானே சுவிட்சர்லாந்தின் மன்னராக அறிவித்துக்கொண்ட நபர், அரசியல்வாதிகளிடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் மன்னர்
31 வயதான ஜோனாஸ் லாவினர் (Jonas Lauwiner) என்ற நபர், சுவிட்சர்லாந்தின் மன்னர் என தன்னைத்தானே அறிவித்துக் கொண்டார்.
அதுமட்டுமின்றி நாடு முழுவதும் சிதறிக்கிடக்கும் 148 உரிமையற்ற நிலத்துண்டுகளை உரிமை கோரி, தான் ஒரு ‘சாம்ராஜ்யத்தை’ உருவாக்கியுள்ளதாக கூறுகிறார்.
இதில் தற்போது வீட்டு உரிமையாளர்களால் பயன்படுத்தப்படும் சாலைகளும் அடங்கும். மேலும், முற்றிலும் சட்டப்பூர்வமாகப் பெறப்பட்ட இந்த நிலங்களில் 83 சாலைப் பகுதிகளும் அடங்கும்.
சட்டத்தில் உள்ள சில குறைபாடுகளை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, ஜோனாஸ் 117,000 சதுர மீற்றர் நிலத்தை இலவசமாகக் கைப்பற்றியிருப்பதாக கூறப்படுகிறது.

இதன்மூலம் அவர் உள்ளூர் சமூகங்கள் மீது அவருக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு கிடைத்துள்ளது.
ஆனால், மற்றவர்களும் அவரைப் பின்பற்றக்கூடும் என்ற அச்சத்தினால், பல சுவிஸ் மாகாணங்கள் விதிகளை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கவும் இது தூண்டியுள்ளது.

அதே சமயம் ஜோனாஸ் லாவினரின் இந்த செயல் அரசியல்வாதிகளிடையே சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸ் சட்டத்தின்படி, உரிமையற்றதாக அதிகாரப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட நிலத்தை உள்ளூர் மன்றத்திற்கு கடிதம் எழுதுவதன் மூலம் கட்டணமின்றி உரிமை கோரலாம்.





