பெண் செல்லப்பிராணியாக வளர்த்துவந்த புலி: சுட்டுக்கொன்ற காவல் துறை

ஜேர்மனியில் பெண்ணொருவர் புலிகளை வளர்த்துவரும் விடயம் ஏற்கனவே சர்ச்சையை உருவாக்கியிருந்த நிலையில், அவரது புலிகளில் ஒன்றை காவல் துறையினர் சுட்டுக்கொன்றனர்.

புலியை சுட்டுக்கொன்ற காவல் துறை

ஜேர்மன் நகரமான Leipzigஇல் வாழ்ந்துவரும் கார்மன் (Carmen Zander) என்னும் பெண், புலிகளை தன் வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்த்துவரும் விடயம் ஏற்கனவே சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், அப்பகுதி மக்கள் பயந்ததுபோலவே, அவரது புலிகளில் ஒன்று கூண்டிலிருந்து தப்பியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமையன்று தன் கூண்டிலிருந்து தப்பிய அந்தப் புலி, 72 வயது முதியவர் ஒருவரை தாக்க, அவர் படுகாயமடைந்துள்ளார்.

பெண் செல்லப்பிராணியாக வளர்த்துவந்த புலி: சுட்டுக்கொன்ற பொலிசார் | Police Shoot Escaped Tiger Dead Germany

அவரது நிலைமை குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. தகவலறிந்த பொலிசார் அந்தப் புலியை சுட்டுக்கொன்றுள்ளனர். புலிகளை செல்லப்பிராணிகளாக வளர்த்துவரும் கார்மன், ஜேர்மனியின் புலிப்பெண் என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.