பிரான்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பு 14 ஆவது தடவையாக நடாத்தும் தேச விடுதலைப்பாடற்போட்டி வன்னிமயில் விருதுக்கானது.இன்று காலை 11.00 மணிக்கு எழுச்சி பூர்வமாக பரிசின் புறநகர் பகுதியான தில்லே என்னும் இடத்தில் ஆரம்பித்திருந்தது. தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறவுள்ள இப்போட்டிக்கான நடுவர்களாக பல நடன ஆசிரியர்கள் ஜரோப்பிய நாடுகளில் இருந்து வருகைதந்நிருந்தனர்.






