தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்ற அமர்வுகளில் 3 மாதங்களுக்கு பங்கேற்காதிருக்க சபை அனுமதி வழங்கியது.
நாடாளுமன்றம் புதன்கிழமை (4) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதனையடுத்து இடம்பெற்ற சபாநாயகர் அறிவிப்பு, வாய்மூல விடைக்கான வினாக்களைத் தொடர்ந்து,
எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற அமர்வுகளில் 3 மாதங்களுக்கு பங்கேற்காதிருக்க அனுமதி கோரி யோசனை முன்வைத்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்ற அமர்வுகளில் 3 மாதங்களுக்கு பங்கேற்காதிருக்க சபை அனுமதி வழங்கியது.