தேசிய போர் நினைவு தின ஒத்திகைப் பணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாளை (19) ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள பிரதான நினைவேந்தல் நிகழ்வுக்கான ஒத்திகைகள் இன்று (18) பாராளுமன்ற விளையாட்டு மைதானத்தில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் நடைபெற்றன.
இதன்போது, முன்னாள் எம்.பி விமல் வீரவங்ச உள்ளிட்ட சுமார் 35 பேர் அடங்கிய குழுவினர், உரிய அனுமதியின்றி வளாகத்துக்குள் நுழைய முற்பட்டு அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளதாக பொலிஸ் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், அவர்களின் முயற்சியை முறியடித்து அங்கிருந்தவர்களை வெளியேற்றியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடரவுள்ளதாகப் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.





