நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருவதால், ஐந்து மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு மண்சரிவு தொடர்பில் முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்த மண்சரிவு முன்னெச்சரிக்கைகள் நேற்று வியாழக்கிழமை (25) இரவு 10:00 மணி முதல் இன்று வெள்ளிக்கிழமை (26) இரவு 10:00 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
அதன்படி, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகள் (DSDs) மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நிலை 2 (ஆம்பர்)) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை: வலல்லாவிட்ட பிரதேச செயலக பிரிவு மற்றும் அதனை அண்டிய பகுதிகள்
மாத்தறை: வெலிப்பிட்டிய பிரதேச செயலக பிரிவு மற்றும் அதனை அண்டிய பகுதிகள்
இதேவேளை, பின்வரும் மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு நிலை 1 (மஞ்சள்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:
காலி: நாகொடை, எல்பிட்டிய, பத்தேகம, யக்கலமுல்ல பிரதேச செயலக பிரிவு மற்றும் அதனை அண்டிய பகுதிகள்
களுத்துறை: பாலிந்தநுவர, மதுகம பிரதேச செயலக பிரிவு மற்றும் அதனை அண்டிய பகுதிகள்
மாத்தறை: கொட்டபொல பிரதேச செயலக பிரிவு மற்றும் அதனை அண்டிய பகுதிகள்
இரத்னபுரி: எலபத்த, கலவான, பெல்மதுல்ல பிரதேச செயலக பிரிவு மற்றும் அதனை அண்டிய பகுதிகள்




