காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

மன்னார் – மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பைக்குளம் பகுதியில் நேற்று புதன்கிழமை (22) காலை காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காட்டு யானை தாக்கியதில் காயமடைந்த நபர் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக மடு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் பன்னிவெட்டுவான் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.