க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமானது

2026 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இன்று (10) திங்கட்கிழமை காலை நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 பரீட்சை மையங்களில் வெற்றிகரமாக ஆரம்பமாகியது.

முற்பகல் அமர்வு நிறைவடைந்துள்ள நிலையில், பிற்பகல் அமர்வு 1:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மாணவர்கள் தங்களது அனுமதிப் பத்திரத்திலுள்ள திருத்தப்பட்ட கால அட்டவணை மற்றும் அறிவுறுத்தல்களின்படி பரீட்சைக்குத் சமூகமளிக்க வேண்டும்.

தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள் மற்றும் குறிப்புப் புத்தகங்களை பரீட்சை நிலையங்களுக்கு எடுத்துச் செல்வது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், விதிகளை மீறுவோருக்குச் சட்டப்படி கடுமையான தண்டனை வழங்கப்படும்.

மேலும், இப்பரீட்சை செப்டம்பர் 5 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதுடன், அதற்கு முன்பாகவே செப்டம்பர் 3 ஆம் திகதியிலிருந்து விடைத்தாள் மதிப்பீடுகள் ஆரம்பிக்கப்பட்டு பெறுபேறுகள் வெளியிடப்படும் என இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.