சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்டபகுதியில், வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனையின் போது, சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை (25) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 75 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கரதியான பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

பிலியந்தலை பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில்  ஈடுபட்டு வருகின்றனர்.