பிஸ்டல் ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலகொட பகுதியில், நேற்று திங்கட்கிழமை (25) இரவு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் அதற்கான 02 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பலாங்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் குளீகொட பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 கிராம் ஐஸ்போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அம்பலாங்கொடை பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.